அப்பா செயலி.. சீமான் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


'அப்பா' என்ற உறவு முறையை மனதார அழைக்க வேண்டுமே ஒழிய அப்பா செயலி 'பிராண்ட்' செய்வதுபோல உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.

தமிழ்நாடு பெற்றோர்-ஆசிரியர் கழகத்தின் சார்பில் 'அப்பா' எனும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். மேலும் இந்த செயலி பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இடையேயான தொடர்பு இடைவெளியைக் குறைப்பதற்கும், அதன்மூலம் ஒட்டுமொத்த கல்வி அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் இந்த புதுமையான தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அப்பா செயலி 'பிராண்ட்' செய்வதுபோல உள்ளது என்று சீமான் விமர்சித்துள்ளார்.பழனியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கல்வியை வியாபாரம் ஆக்கிவிட்டது முதல் தவறு என்றும்  கல்வி என்பது மாநில உரிமை. அதை மத்திய அரசுக்கு கொடுத்ததும் தவறு என்றும்  அதனாலேயே வலுக்கட்டாயமாக இந்தியை திணிக்கிறார்கள் என கூறினார் . மேலும் மும்மொழி என்பதை தவிர்த்து பன்மொழி என தெரிவித்தால் அதை ஏற்கலாம் என்றும் மாணவர்கள் விரும்பினால் இந்தி படிக்கட்டும், அதை கொள்கையாக கொண்டு வருவது தவறு என்று சீமான் கூறினார்.

மேலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 'அப்பா' என்ற செயலியை அறிமுகப்படுத்தியது என்பது 'பிராண்ட்' செய்வது போல உள்ளது என்றும்  ஜெயலலிதாவை அம்மா என்று பொதுமக்கள் அழைத்தது இயற்கையாக அமைந்தது. ஆனால் 'அப்பா' என்ற உறவு முறையை மனதார அழைக்க வேண்டுமே ஒழிய 'பிராண்ட்' செய்வது ஆகாது என்று கூறிய சீமான் நீங்கள் நல்ல ஆட்சி செய்தால் மக்கள் உங்களை 'அப்பா' என்று அழைப்பார்கள், போற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dad App Seeman Review!


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->