நெருங்கும் டானா புயல்: தமிழகத்தின் 9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!  - Seithipunal
Seithipunal


வங்கக்கடலில் உருவானது டாணா (DANA) புயல். மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக வலுப்பெற்றது.

வரும் 25ம் தேதி அதிகாலை இந்த டாணா புயல் ஒடிசாவின் பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே தீவிர புயலாக கரையை கடக்க கூடும் என்று  இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த டாணா புயல் காரணமாக ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு வரும் 24, 25 ஆகிய 2 நாட்கள் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்.

இதற்கிடையே, டானா புயல் காரணமாக, சென்னை, கடலூர் உள்ளிட்ட 9 துறைமுகங்களில் இன்று 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் இன்று டானா புயல் உருவாகி, கரையை நெருங்கி வரும் நிலையில், சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 9 துறைமுகங்களில் இரண்டாம் எண் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dana Cyclone warn flag Tamilnadu


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->