தீபாவளி எதிரொலி!...சென்னை தாம்பரம்- நெல்லை இடையே சிறப்பு ரயில் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை தாம்பரம்- நெல்லை இடையே  சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னையில் வசிக்கும் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விநாயகர் சதுர்த்தி, ரம்ஜான், கிறிஸ்துமஸ், தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை காலங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்வார்கள். அவ்வாறு செல்லும் போது கடுமையான கூட்ட நெரிசலில் சிக்கித் தவிப்பர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை யொட்டி  பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக, சென்னை தாம்பரம்- நெல்லை இடையே  சிறப்பு ரெயில் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நெல்லையில் இருந்து நவம்பர் 3-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில், மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும் என்றும், மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து நவம்பர் 4 -ம் தேதி மதியம் 2.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5.15 மணிக்கு திருநெல்வேலி வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Diwali echo special train announcement between chennai tambaram nellai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->