தமிழக ஆளுநரின் கொடைக்கானல் வருகை!...திராவிடர் தமிழர் மன்றம் பரபரப்பு போஸ்டர்!
Tamil nadu governor visit to kodaikanal dravidar tamil forum sensational poster
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை புரிந்த தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி இன்று கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற டிடி தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட போது, 'தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்' என்ற வரி தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணைமுதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கொடைக்கானல் வந்த ஆளுநரின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அவர் தங்கி இருந்த ஓட்டல் முன்புறம் மற்றும் அவர் பங்கேற்க சென்ற வழிகளில் திராவிடர் தமிழர் மன்றம் சார்பில் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது.
அந்த போஸ்டரில், தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இன்று காலை பல்வேறு இடங்களில் கண்டறியப்பட்ட இந்த போஸ்டர்களை போலீசார் கிழித்து அப்புறப்படுத்தினர்.
English Summary
Tamil nadu governor visit to kodaikanal dravidar tamil forum sensational poster