திருப்பத்தூர் பேருந்து விபத்து - பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு.! - Seithipunal
Seithipunal


திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி அருகே இன்று அதிகாலை அரசு சொகுசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோர் படுகாயமடைந்தனர். 

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேருந்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ஏராளமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த கிருத்திகா, வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ், சித்தூரை சேர்ந்த அஜீத், மற்றும் அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை உள்ளிட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வாணியம்பாடி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death troll increased tirupathur vaniyambadi bus accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->