தீபாவளி பண்டிகை : மூன்று நாட்கள்.! 600 கோடி இலக்கு.! - Seithipunal
Seithipunal


பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் கடந்தாண்டு நவம்பர் 3 மற்றும் 4-ஆகிய 2 நாட்களில் 431.03 கோடி ரூபாய்க்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. 

அதேபோல், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களான சனிக்கிழமை ரூ.200 கோடி, ஞாயிற்றுக்கிழமை ரூ.200 கோடி, தீபாவளி பண்டிகை அன்று ரூ.200 கோடி என்ற அளவில் மது விற்பனை செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் 10 நாட்களுக்கு தேவையான மதுபானங்களை 40 சதவீதம் சாதாரண ரகம் மதுபானங்கள், 40 சதவீதம் நடுத்தர ரக மதுபானங்கள், 20 சத வீதம் உயர்தர மதுபானங்கள் என்று இருப்பு வைத்திருக்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, மதுபானங்கள் குறைவாக விற்பனையாகும் மாவட்டங்களில் அதற்கான காரணங்களை கண்டறிவதற்கு மண்டல மேலாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் அனைத்து மதுபான கிடங்குகளில் உள்ள சரக்குகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு எதிர்வரும் வடகிழக்கு பருவமழையினால் எவ்வித சேதாரமும் ஏற்படா வண்ணம் உரிய தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு பாதுகாப்பான முறையில் வைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

மேலும், தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் இருப்பில் உள்ள மதுபான பெட்டிகள், பதிவேடுகள் மற்றும் கோப்புகளுக்கு மழை மற்றும் வெள்ள நீரால் பாதிக்கப்படாதவாறு தரையில் இருந்து உயர்த்தப்பட்டு, பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

deepavali festival Liquor sale in tamilnadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->