6 மாதம் ஆச்சு.!! வெளியிடப்படாத தேர்வு முடிவுகள்.!! தடுமாறுகிறதா டி.என்.பி.எஸ்சி? - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையம் ஒரு தலைவர் மற்றும் 13 உறுப்பினர்கள் கொண்ட தன்னாட்சி அமைப்பாக செயல்பட்டு வரும் நிலையில் அதன் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் செயல்பட்டு வந்தார்.

அவர் ஓய்வு பெற்ற பிறகு டிஎன்பிஎஸ்சி தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருந்து வரும் சூழலில் 13 உறுப்பினர்களின் தற்போது 4 உறுப்பினர்கள் மட்டுமே பொறுப்பில் உள்ளனர். இந்த 4 உறுப்பினர்களின் ஒருவரான முனியநாதன் ஐஏஎஸ் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் பொறுப்புத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே தமிழ்நாடு தேர்வு ஆணையம்.. தேர்வுகள் நடத்துவதிலும் நடந்து முடிந்த தேர்வுகளின் முடிவுகள் அறிவிப்பதிலும், அரசு பணியாளர்களை தேர்வு செய்வதிலும் ஆமை வேகத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் கீழ பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 5,446 இடங்களுக்கான குரூப்1 மற்றும் குரூப்2 தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி நடைபெற்ற நிலையில் 57 ஆயிரம் போட்டியாளர்கள் தேர்வு எழுதினர். 

கிட்டத்தட்ட 10 மாதங்கள் கடந்த போதிலும் தேர்வு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மத்திய அரசு நடத்தும் குடிமை பணியாளர்களுக்கான தேர்வுகள் கடந்த பிப்ரவரி மாதம் அறிவிக்கப்பட்டு, மே, செப்டம்பர் மாதங்களில் தேர்வுகள் நடைபெற்று, அண்மையில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் வெளியிடுவதில் கிட்டத்தட்ட ஓராண்டு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்திலும், மனவேதனையிலும் இருப்பது தெரிய வருகிறது. 

மேலும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களின் நியமனம் செய்வதில் இழுபறி நீடித்து வருவதால் நடந்து முடிந்த அரசு பணியாளர்கள் தேர்வு முடிவுகள் வெளியிடுவது மற்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்துவது கேள்விக்குறியாகி உள்ளதாக அரசு பணி தேர்வர்கள் குமுறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delay in TNPSC exam results release


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->