டெல்லி | மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் - முதல்வர் ஸ்டாலின்!
delhi Wrestler Protest stalin tweet
டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக நிற்போம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், மல்யுத்த வீரர்கள் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்ள போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதை காண நெஞ்சம் பதைப்பதாகவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார் தொடர்பாக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருக்கு எதிராக போராடி வரும் நிலையில், மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
போராடி வரும் மல்யுத்த வீரர்களுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் சார்பாக திமுக எம்.பி. அப்துல்லா நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில், "இந்தியாவுக்கே பெருமை தேடித்தந்த நமது மற்போர் வீரர்கள் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாகி, சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதைக் காண நெஞ்சம் பதைக்கிறது.
அவர்களைத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திரு. புதுகை அப்துல்லா அவர்கள் இன்று தி.மு.க. சார்பில் சந்தித்து ஆதரவைத் தெரிவித்துள்ளார். நமது மற்போர் வீரர்களுக்கு நீதி கிடைக்க உறுதுணையாக உடன் நிற்போம்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
delhi Wrestler Protest stalin tweet