மக்களே உஷார் : நாளுக்கு நாள் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சல்..3நாள்களில் 30 பேர் பாதிப்பு!!
Dengue fever 30 people affected in 3 days
தமிழ்நாட்டில் கடந்த மூன்று நாட்களில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாட்டில் கொசுவின் மூலம் பரவக்கூடிய டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தேனி, மதுரை, திருப்பூர், அரியலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
டெங்கு காய்ச்சல் அறிகுறி தென்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் சமீபத்தில் அறிவித்திருந்தார். சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுமாறு சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் நிகழும் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 40 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 22 நாட்களில் மட்டும் 170 பேர் டெங்கு காய்ச்சல் அவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 30 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அலுவலர்களும் டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அறிவுரைத்தல்.
English Summary
Dengue fever 30 people affected in 3 days