மழையை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறது - துணை முதல்வர்.!
deputy chief minister uthayanithi stalin visit control office in chennai corporation
வங்கக்கடலில் நேற்று மலை உருவான ஃபெஞ்சல் புயலால், நேற்று இரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னைக்கு 90 கி.மீ- மாமல்லபுரத்தில் இருந்து 50 கி.மீ- புதுச்சேரியில் இந்து 80 கி.மீ தொலைவிலும் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் மாமல்லபுரம் - மரக்காணம் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதன் எதிரொலியால், சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில், இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்ததாவது:- "மழையை எதிர்கொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
புயல், மழையால் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட்டுவிடக்கூடாது என போர்க்கால அடிப்படையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் வசித்த 193 பேர் அழைத்து வரப்பட்டு 8 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
1,700 மோட்டார் பம்புகளை கொண்டு மழைநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஹைட்ராலிக் மரம் அறுக்கும் இயந்திரம், ஹைட்ராலிக் ஏணி என 500 கருவிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன" என்றுத் தெரிவித்தார்.
English Summary
deputy chief minister uthayanithi stalin visit control office in chennai corporation