ரூ.25,236கோடி நஷ்டமா..பணமதிப்பிழப்புதான் இதற்கு காரணமா?என்ன சொல்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்!! - Seithipunal
Seithipunal


பத்தாண்டு கால பாஜக ஆட்சியில் இரண்டு முறை பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதால் ரூ.25,236 கோடி நஷ்டம் என அமைச்சர் மனோ தங்கராஜ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

 பாஜக ஆட்சியில் குறிப்பாக நவம்பர் 8ஆம் தேதி 2016ஆம் வருடம் நள்ளிரவு 500,1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. கருப்பு பணம் ஊழலை ஒழிக்க இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு 500,1000 நோட்டுகள் செல்லாத என அறிவித்தபோது நாடு அதிர்ச்சி அடைந்து பெரும் பரபரப்பு நிலவியது.

 பின்னர் புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி. 500,1000 நோட்டுக்களை வங்கியில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்தது.

 புதிய 200,100, 500மற்றும் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து வந்த நிலையில்,2000 ரூபாய் நோட்டுகளை மட்டும் திரும்ப பெறுவதாக கடந்த மே 20 தேதி 2023 ம் ஆண்டு ரிசர்வ் வங்கி அறிவித்தது. பின்னர் சமீபத்தில் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுவரை 2000 ரூபாய் நோட்டுகள் 97.38 சதவீதம் திரும்ப வந்துள்ளது. இன்னும் 9,330 கோடி இன்னும் பொது மக்களிடம் உள்ளது என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.

இந்த நிலையில், அமைச்சர் மனோ தங்கராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது, பத்து ஆண்டுகால பாஜக ஆட்சியில் 2 முறை பண மதிப்பு எப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பண அச்சடிப்பின் மூலம் மட்டுமே இந்தியாவிற்கு ரூ.25,236 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நமக்கு கிடைத்த பையன் பூஜ்ஜியம் என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devaluation rs25236 crore loss


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->