சதுரகிரி மலையில் சோகம் - மூச்சுத்திணறலால் பக்தர் உயிரிழப்பு.!
devotee died in sathurakiri malai
சதுரகிரி மலையில் சோகம் - மூச்சுத்திணறலால் பக்தர் உயிரிழப்பு.!
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் சுந்தர மகாலிங்கம் கோயில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி என்று மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே மக்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும். அதே வேளை மழை நாட்களில் மலை ஏறுவதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை.
இந்த நிலையில் நேற்று பிரதோஷ வழிபாட்டிற்காக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி மலைக்கு வருகை தந்தனர்.
அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சிவாஜி என்பவர் கோயிலுக்கு செல்லும் வழியில் பச்சரிசி பாறை என்னுமிடத்தில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சக பக்தர்கள் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
devotee died in sathurakiri malai