மகாளய அமாவாசை.. இன்று முதல் சதுரகிரி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி.! - Seithipunal
Seithipunal


மகாளய அமாவாசை மற்றும் பிரதோஷத்தை  முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து சுமார் 4700 அடி உயரத்தில் சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து, ஒவ்வொரு மாதமும் பிரதோஷம் மற்றும் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதோஷம் மற்றும் மகாளய பவுர்ணமியை முன்னிட்டு இன்று முதல் முதல் செப்டம்பர் 26-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும்பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களைக் கொண்டுச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கு கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. 

மேலும், கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதி நாட்களில் மழை பெய்தால் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Devotees allowed to chaturagiri temple from today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->