மாசி திருவிழா - திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்..!
devotees croud increase in thiruchenthur temple
தமிழகத்தில் உள்ள கோவில்களில் மாசி திருவிழா மிக விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 12 நாட்கள் மாசி திருவிழா நடைபெறுவதால், திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்த நிலையில் இன்று கேரள மாநிலத்தில் இருந்து திருச்செந்தூருக்கு வருகை தந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும், இன்று விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து பக்தர்கள் சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
English Summary
devotees croud increase in thiruchenthur temple