தொடர் விடுமுறை - திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்.! - Seithipunal
Seithipunal


தமிழ் கடவுள் என்று எல்லோராலும் அழைக்கப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்தக் கோவில் கடற்கரையில் அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும்.

இந்த நிலையில், வார விடுமுறை தினமான இன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். பின்னர் கடல் மற்றும் நாழிக்கிணறு தீர்த்தத்தில் புனித நீராடி வருகின்றனர். 

இதைத் தொடர்ந்து பக்தர்கள் பொது தரிசன வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் வருகை தந்துள்ளதால், கோவில் வளாகம், கடற்கரைப் பகுதி, நாழி கிணறு, முக்கிய சாலைகள் முழுவதும் பக்தர்களால் நிறைந்து காணப்படுகிறது. 

பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுவதால், கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees croud increase in thiruchenthur temple


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->