2 நாட்கள் திருச்செந்தூருக்கு செல்ல வேண்டாம் - பக்தர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் - காரணம் என்ன?
devotees dont go thiruchenthur temple for rain
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை பெய்ததனால் தாமிரபரணி ஆற்றில் 2-வது நாளாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில், மழை, வெள்ள பாதிப்பு காரணமாக திருச்செந்தூருக்கு செல்வதை பக்தர்கள் இரண்டு நாட்கள் தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
"மழை மற்றும் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஸ்ரீவைகுண்டம்-திருச்செந்தூர் மற்றும் ஏரல்-திருச்செந்தூர் சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. திருச்செந்தூர் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. ஆகவே மழை, வெள்ளத்தினை கருத்தில் கொண்டு இரண்டு நாட்களுக்கு திருச்செந்தூர் கோவிலுக்கு வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
devotees dont go thiruchenthur temple for rain