திருச்செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் அச்சம்!...கரை ஒதுங்கியது என்ன தெரியுமா? - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள், கடலில் புனித நீராடி முருகனை தரிசனம் செய்கின்றனர். இந்த கடலில் அவ்வப்போது ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்குவதும், கடல் உள்வாங்குவதும் நிகழ்ந்து வருகிறது.

இந்நிலையில், நேற்று திருச்செந்தூர் கடல் 60 அடி தூரத்திற்கு உள்வாங்கியது. இதனால் கடலில் உள்ள பாறைகள் வெளியே தெரியத் தொடங்கியதை அடுத்து, அவற்றின் மீது ஏறி நின்று பக்தர்கள் புகைப்படங்களை எடுத்துக் கொண்டனர்.  இந்த நிலையில், திருச்செந்தூர் கடற்கரையில் இன்று ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியுள்ளதால் பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர்.

ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கியதையடுத்து, அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்ட மத்திய கடல் மீன்வள அதிகாரிகள், இந்த வகை ஜெல்லி மீன்களால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாது என தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் ஒரு சில வகை ஜெல்லி மீன்களால் உடலில் அரிப்பு ஏற்படுவதோடு, தோல் நோய் அபாயமும் ஏற்படுகிறது என்பது குறிப்பித்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Devotees panic on Tiruchendur beach Do you know what washed ashore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->