அதிர்ச்சி - தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நீக்கம்.!
dharmapuri east district incharge remove
தமிழகத்தில் ஆளுங்கட்சியான தி.மு.க.,வில் கடந்த சில நாட்களாக, புதிய மாவட்டங்கள் ஏற்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மாவட்டங்களில் செயலாளர்களை மாற்றி விட்டு பொறுப்பாளர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தர்மபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளராகப் பதவி வகித்து வந்த தடங்கம் சுப்பிரமணியம் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த உத்தரவை திமுக பொதுச் செயலாளரும், தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து தருமபுரி கிழக்கு மாவட்டத்தின் புதிய பொறுப்பாளராக தர்ம செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார்.
English Summary
dharmapuri east district incharge remove