தருமபுரி | ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக்கொண்டு இளைஞர் - அரண்டுபோன பயணிகள்! - Seithipunal
Seithipunal


தருமபுரி அருகே, ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தில் தன்னைத்தானே கழுத்தை அறுத்துக் கொண்ட நபரால், சக பயணிகள் கத்தி கூச்சலிட்டனர்.

தர்ம‌புரி மாவட்டம், பாலக்கோட்டு முத்துகவுண்டன் தெருவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் பணி நிமிர்த்தம் காரணமாக ஓசூர் சென்றுவிட்டு பின்னர், பாலக்கோட்டிற்கு தமிழக அரசுப் பேருந்தில் வந்து கொண்டிருந்தார். 

பேருந்து வெள்ளி சந்தை பகுதி அருகே வந்த போது திடீரென அருண்குமார் கத்தி கூச்சலிட்டார். தன்னை சாத்தான் ஒன்று கொலை செய்ய பார்ப்பதாக அலறினார்.

மேலும், யாரும் எதிர்பாராதவிதமாக அவர் எடுத்து வந்திருந்த கத்தரிக்கோலால், தன் கழுத்தை தானே அறுத்துக் கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தார்.

இதனை சற்றும் எதிர்பாராத சக பயணிகள் அலறி கத்த ஆரம்பித்தனர். உடனடியாக அருண்குமாரை அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

மேலும், சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dharmapuri Palakodu Young man attempt suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->