பெற்றோர்களே உஷார்.!! ரூ.10 மாம்பழம் ஜூஸில் இறந்து கிடந்த குட்டி எலி.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அருகே பி.கே. புரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் காட்பாடி - குடியாத்தம் தேசிய நெடுஞ்சாலையில் பெட்டிக்கடை ஒன்றில் தனது குழந்தைகளுக்கு அட்டைப் பெட்டியில் அடைக்கப்பட்ட ரூ.10 மாஸா நிறுவனத்தின் மாம்பழ ஜூஸ் வாங்கிக் கொடுத்துள்ளார்.

குழந்தைகள் அதனைக் குடித்த போது கசப்புத் தன்மையுடன் இருந்ததாக சீனிவாசனிடம் கூறியுள்ளனர். இதனால் சந்தேகமடைந்த சீனிவாசன் ஜூஸ் பாக்கட்டினை கிழித்து பார்த்தபோது அதில் குட்டி எலி ஒன்று இறந்து கிடந்தது அவருக்கு தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சீனிவாசன், இறந்த எலியை செல்போனில் வீடியோ எடுத்து உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Died baby rat found in mango juice in Vellore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->