குடிமகன்களுக்கு குட் நியூஸ்.. டாஸ்மாக் கடைகளில் புதிய நடைமுறை அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மொத்தம் 4238 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. இதனிடையே டாஸ்மாக் மதுபான கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு விலைப்பட்டியல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதன் மூலம் மது குடிப்பவர்கள் மதுபானங்களின் விலைகளை அறிந்து கொள்ள ஏதுவாக டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் போர்டு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டிஜிட்டல் பலகையில் எந்தெந்த மதுபானங்கள், எவ்வளவு விலையில் டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த விவரங்கள் இந்த பலகையை பார்த்து அறிந்து கொள்ளலாம். தமிழகத்தில் மாவட்டத்திற்கு 5 கடைகள் விதம் முதற்கட்டமாக 200 டாஸ்மாக் கடைகளில் செயல்படுத்தப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Digital board introduce tasmac


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->