திண்டுக்கல் கருப்பணம்பட்டியை சார்ந்தவர் கருப்பு பூஞ்சைக்கு பலி..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ச்சியாக அதிகரித்து வந்த நிலையில், கடந்த 3 நாட்களாக குறைந்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவல் தொற்றுடன் திடீரென கருப்பு பூஞ்சை பிரச்சனையும் ஏற்பட்டு மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

கருப்பு பூஞ்சையால் 500 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இன்று காலை கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த கொரோனா நோயாளிகள், கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். 

இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கருப்பணம்பட்டி பகுதியை சார்ந்தவர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டது. 

இதனையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா வைரஸில் இருந்து பூரண நலமடைந்த அவருக்கு, கருப்பு பூஞ்சை ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று ஒரேநாளில் இவருடன் சேர்த்து தமிழகத்தில் 3 பேர் கருப்பு பூஞ்சையால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Black Fungus Person Died 30 May 2021


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->