ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை! திண்டுக்கல் டூ புதுவை - பெரும் சோகம்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில், திண்டுக்கல்லை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்த திண்டுக்கல்லை சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் குடும்பம் விடுதி (லாட்ஜ்) ஒன்றில் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இது குறித்து வெளியான முதல் கட்ட தகவலின் படி, கடந்த ஏழாம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சந்திரசேகர் அவரின் மனைவி, மகள், மகன் ஆகியோர் புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். 

பிறகு ஓய்வெடுப்பதற்காக அங்கு உள்ள பிரபல விடுதி ஒன்றில் தங்கி உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை அவர்கள் நான்கு பேரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

இது குறித்து விடுதி நிர்வாகம் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், 4 பேரின் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

மேலும் இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தல் போலீசார், சந்திரசேகர் மற்றும் அவரின் குடும்பத்தார் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள்? குடும்பப் பிரச்சனை காரணமா? கடன் பிரச்சனை காரணமா? வேறு ஏதாவது முன் பகையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dindigul Famiy Suicide in Puducherry


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->