அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, பிதுக்கப்பட்ட ரைட்டர் படம்.! டிவிட்டரில் இயக்குனர் கதறல்.! காரணம் யார் தெரியுமா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் சீனு ராமசாமி தனது ற்றிவிட்டர் பக்கத்தில், "கேரளா, கர்நாடகா மாநிலத்தில் அவர்கள் படங்கள் வெளியாகும்போது அவர்கள் முன்னுரிமை தருவது போல, தமிழ்நாட்டு படங்கள் வெளியாகும்போது தமிழ் படங்களுக்கு முதல் முக்கியத்துவம் தரவேண்டும்.

மாற்றுமொழி டப்பிங்& ஆங்கிலப்படங்கள் தனியாக திரையிட கால அட்டவணையை தயாரிப்பாளர் சங்கம் உருவாக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்து இருந்தார்.

இதற்க்கு ஒருவர், "இன்று முதல் உங்கள் நண்பர் விஜய்சேதுபதியாலும், திமுக உபிகளாலும் நீங்கள் இனவெறின் என்று அன்போடு அழைக்கபடுவீர்கள்." என்று பின்னூட்டமாக தர, பதறிப்போன சீனு, "இது இனவெறி அல்ல. நான் யாரையும் வெறுப்பவன் அல்ல, எனது பதிவை முழுமையாக படிக்கவும்" என்று தன்னிலை விளக்கத்தை கொடுத்தார்.

பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை அடுத்த சிலமணி நேரத்தில் மீண்டும் ஒரு பதிவை போட்டார், அதில், "ஒரே நேரத்துல மூனு டப்பிங் மற்றும் ஆங்கில படங்கள் அதிக விளம்பரத்தோட
வந்தா இங்க இருக்கிற 'ரைட்டர்' எப்படி தன்னோட வீட்ல ஆனந்தமா விளையாட முடியும்? சிலந்தி கூடு கட்டிராதா?

எல்லாத்தையும் ஒரே நேரத்துல விடாம ஒவ்வொன்னா கூட விடுங்க இது பத்தி யோசிக்கலமா அவ்வளவுதான் ஏ கேள்வி..!!" என்று எதற்காக பதிவு போட்டேன் என்பதை விளக்கத்தோடு நேரடியா பேசினார். 

ஆக, ரைட்டர் படத்தை அந்நிய மொழி படங்கள் அடக்கி, ஒடுக்கி, நசுக்கி, பிதுக்கிவிட்டது என்று இயக்குனர் சீனு சொல்லாமல் சொல்லுகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

director seenu ramasamy twit


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->