இயக்குநர் செல்வராகவன் தவற விட்ட பணப்பை 15 நிமிடத்தில் மீட்பு - விமான நிலைய ஊழியர்களுக்கு பாராட்டு!
director Selvaraghavan lost wallet recovered 15 minutes
திரைப்பட இயக்குநர் செல்வராகவன், மதுரையில் இருந்து சென்னை செல்லும்போது ஏர் இந்தியா விமானத்தில் தொலைந்த அவரது பணப்பையை 15 நிமிடத்தில் கண்டுபிடித்து கொடுத்த ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
திரைப்பட இயக்குநர் செல்வராவன், தனது சொந்த வேலை நிமிர்த்தமாக மதுரைக்கு வந்து பின்னர், அவர் ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னைக்குப் சென்றுள்ளார். இந்நிலையில், எதிர்பாராமல் விமானத்தில் தனது பணப்பையை தவறவிட்டார். அவர் பையை தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, சுமார் 15 நிமிடத்தில் அவருக்கு ஏர் - இந்தியா நிறுவனத்தில் இருந்து அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் ஒருவர் நீங்கள் தொலைந்த பணப்பை தங்களிடம் உள்ளது. அதனை நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து செல்வராகவன் ஏர் - இந்தியா நிறுவனத்திற்கு சென்று அவரது பணப்பையை பெற்றுக்கொண்டு, அந்த நிறுவனத்துக்கு நன்றியை தெரிவித்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்திலும் பதவிட்டு இருந்தார். இதற்கு விமான நிலைய நிர்வாகமும் பதிலளித்தது. அதில், ''உங்களுக்கு எங்கள் ஊழியர்கள் மிகுந்த அர்ப்பணிப்புடன் உதவியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்'' என பதிவிட்டிருந்தனர்.
English Summary
director Selvaraghavan lost wallet recovered 15 minutes