கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக! திமுக அரசுக்கு எதிராக தமிழ்த் திரைப்பட இயக்குநர் கொந்தளிப்பு!
Director Thankar Bachan Condemn to DMK MK Stalin Govt Kallarasarayam death
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச்சாராயம் குடித்ததில் 37 பேர் உயிரிழந்துள்ள நிலையில், மருத்துவமனைகளில் 80 க்கும் மேற்பட்டோர் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளச்சாராயம் மரணத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர் கட்சிகளான அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்டவைகள் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குநர் தங்கர்பச்சான் "கருணையிலா ஆட்சிக்கடிது ஒழிக" என்று தனது கடும் கண்டனத்தை ஆளும் திமுக அரசுக்கு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், "மாடுகளின் உயிர்களுக்கு இருக்கும் மதிப்பு கூட மனித உயிர்களுக்கு இங்கே இல்லை. கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் இன்று கள்ளச்சாராயத்தால் பறிபோன நாற்பது உயிர்களைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் நாம் தமிழ்நாடு அரசு விற்கும் கொடிய மதுவினால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் இம்மக்கள் செத்து மடிவது குறித்து பேச மறுக்கின்றோம்!
நிர்வாகத்திறனின்றி ஆட்சி செய்து மக்களின் உயிர்பற்றி அக்கறைக் கொள்ளாமல் மடிய காரணமாக இருந்துவிட்டு மக்களின் வரிப்பணத்தில் இருந்தே இழப்பீடு தரும் கொடுமைகளை எல்லாம் இன்னும் எத்தனைக்காலத்துக்குத்தான் சகித்துக் கொள்வது?
தாலியை இழந்து நிற்கும் இந்தக்குடும்பங்களின் பெண்களுக்கு இனி துணை யார்?
தந்தையை இழந்து நிற்கும் இந்த ப்பிள்ளைகளின் எதிர்காலத்துக்கு இனி பொறுப்பு ஏற்கப் போவது யார்?
உழைக்கும் மக்களின் உடலில் உள்ள பலத்தை அழித்து மனித வளத்தை அழித்தொழித்து, அனைத்துக் குற்றங்களுக்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் மதுவை விற்காமல் இனியாவது ஆட்சி செய்யப் பாருங்கள். இப்படிப்பட்ட இழப்புகள் உங்கள் இல்லத்தில் ஏற்பட்டிருந்தால் தெரியும் அது என்ன மாதிரியான வலி என்பது" என்று தங்கர்பச்சான் தெரிவித்துள்ளார்.
English Summary
Director Thankar Bachan Condemn to DMK MK Stalin Govt Kallarasarayam death