மக்களை உஷார்.. இந்த நேரத்தில் வெளியே போகாதீங்க.. ஆட்சியர்கள் திடீர் எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஓட்டியுள்ள மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்துள்ளது. 

ஆனால் வட மற்றும் உள் மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து  வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். நேற்று சேலத்தில் 42.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள அதிகபட்ச வெப்பநிலையாகும். 

அதேபோன்று ஈரோடு, திருப்பத்தூர், கரூர், வேலூர், தர்மபுரி, மதுரை, நாமக்கல், திருச்சி, ஆகிய மாவட்டங்களில் 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இந்த நிலையில் கடும் வெயில் நிலவுவதால் நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை தேவை இன்றி பொதுமக்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் அருந்த வேண்டும் என சேலம், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

District collectors issued heat wave warning in Tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->