தனியே வசித்த பெண்மணி.. அழுகிய பிணமாக மீட்பு.! புதுக்கோட்டையில் பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி அருகே ஒரு 55 வயது மதிப்புள்ள பெண்ணின் பிணம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த லலிதா (வயது 55) என்ற பெண் திருமணமாகி கணவருடன் விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்துள்ளார். அவர் தனியாக வசித்து வந்த நிலையில் சமீபத்தில் அவரது வீட்டில் இருந்து மோசமான துர்நாற்றம் வீசியுள்ளது.

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பெயரில் விரைந்து வந்த போலீசார் உள்ளே சடலமாக கிடந்த லலிதாவின் பிணத்தை மீட்டுள்ளனர். அப்போது அவரது உடல் அழுகிய நிலையில் இருந்துள்ளது. 

இந்த சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்த போலீசார் இதை சந்தேக மரணமாக பதிவு செய்தனர். அவர் கொலை செய்யப்பட்டு இருந்தாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Divorce women death in Pudukkottai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->