ஆபாச பேச்சு! திமுக அமைச்சர் பொன்முடியின் பதவி பறிப்பு!
DMK Minister ponmudi MK Stalin
அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் திமுக அமைச்சர் பொன்மொடி தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
திமுக தலைவர்களில் அதிகப்படியான சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வரக்கூடிய அமைச்சர் பொன்முடி, அண்மையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது மிக மிக ஆபாசமான விஷயங்களை பேசி சர்ச்சைகள் சிக்கி உள்ளார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
பாஜகவின் மாநில துணைத்தலைவர், நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக், நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், குஷ்பு, காயத்ரி ரகுராம் உள்ளிட்டவர்கள் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் அமைச்சர் பொன்முடியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவரை பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் பொன்முடியை நீக்குவதாக திமுகவின் தலைமை தற்போது அறிவித்துள்ளது.
இருப்பினும் அவர் திமுகவின் உறுப்பினராகவும், அமைச்சராகவும் தொடர்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK Minister ponmudi MK Stalin