அன்று ஸ்டாலினின் கிழியாத சட்டை! இன்று கிழித்து, பதிலடி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்! - Seithipunal
Seithipunal


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மனு அளிப்பதற்காக இன்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்றிருந்தார். 

பின்னர், ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவரிடம் அளித்து, மேலும் சில கோரிக்கைகளையும் வலியுறுத்தினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், "கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள் உதவியோடு தான் இந்த  கள்ளச்சாராய விற்பனை நடந்து வருகிறது. 

இந்த கள்ளச்சாரய விவகாரம் குறித்து சிபிசிஐடி காவல்துறையினர் விசாரிப்பதால் உண்மை வெளிவரப் போவதில்லை. இது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.

இதுகுறித்த 6 கோரிக்கைகள் அடங்கிய மனுவை இன்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை நேரில் சந்தித்து அளித்துள்ளோம். இதற்கு ஆளுநர் உடனடியாக தீர்வு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம். 

எங்கள் தரப்பு கருத்துக்களை தமிழக ஆளுநர் மிக கவனமாக கேட்டறிந்தார். மேலும், அவர் தமிழகத்தில் நடக்கும் போதைப்பொருள் விற்பனை மற்றும் அதன் நடவடிக்கைகள் குறித்து வேதனை தெரிவித்தார்.  

தமிழக அரசால் நடத்தப்படும் மதுபான கடைகளை மூட வேண்டும். மேலும், அமைச்சர் முத்துச்சாமி பதவி விலக வேண்டும். ஆட்சி செய்பவர்களே மதுபானக் கடைகளை நடத்தி வருகின்றனர். 

தமிழக அரசு தனது வருமானத்திற்காக மதுபானம் விற்றால் மக்களை காப்பாற்ற முடியாது. மதுபானக் கடைகள் மூலம் கோடியில் சம்பாதிக்கிறார்கள். 

இதனால் மக்கள் உயிரிழக்கிறார்கள். தமிழகத்தில் டாஸ்மார்க் கடைகளை மூடி, பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

மேலும், கள்ளச்சாராய விவகாரத்தை வைத்து அதிமுக விளம்பரம் தேடுவதாக முதல்வர் ஸ்டாலின் கூறிய விமர்சனத்திற்கு பதில் அளித்த பிரேமலதா விஜயகாந்த், "கிழியாத சட்டையை கிழித்ததாக காண்பித்துக் கொண்டு, சட்டமன்றத்தில் இருந்து வெளியே வந்து, பத்திரிக்கையாளர்களை அழைத்து விளம்பரம் தேடியது தான், தமிழ்நாட்டின் உச்சபட்ச விளம்பரம்" என்று பிரேமலதா விஜயகாந்த் பதிலடி கொடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMDK Premalatha Vijayakanth Illegal Liquor TN Governor


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->