திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது - அண்ணாமலை!! - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 தமிழ்நாடு பாஜக சார்பில் இன்று சென்னையில் மாவட்ட தலைவர்கள் செயலாளர்கள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக முக்கிய நிர்வாகிகள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

 பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், நடிகர் பிரகாஷ்ராஜ் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை, பாஜக பற்றி பேசுவதற்கு அரசியல் அனுபவம் இல்லாதவர் நடிகர் பிரகாஷ் ராஜ். பிரதமரை திட்டுவதை மட்டுமே வேலையாக வைத்துள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ். தமிழ்நாட்டில் இம்முறையும் பாஜக வெல்லும். திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk Alliance Thirumavalavan talk annamalai


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->