கப்பலேறியது தி.மு.கவின் மானம் - இலங்கையில் கோடி கோடியாக குவிக்கப்பட்ட பணக்குவியல் : வெளியான பரபரப்பு தகவல்கள்.!
dmk-arakonam-candidate-jagathrakshakan-family
இலங்கையில் கச்சா எண்ணெய் சுத்தகரிப்பு நிலையம் அமைப்பதற்கு ஓமன் அரசு முதலீடு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த விவகாரம் திமுக பக்கம் திரும்பி சர்வதேச அளவில் பேசப்படும் விவகாரமாக உருவெடுத்துள்ளது.
ஓமனின் கச்சா எண்ணெய் அமைச்சகம், சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டெர்நேஷனல் பிரைவேட் லிமிட்டடுடன் இணைந்து இந்த ப்ரோஜெக்ட்டை செய்வதாக அறிவித்தது.
3.85 பில்லியன் அமெரிக்க டாலர்களில் அமைய இருக்கும் அந்த சுத்தகரிப்பு நிலையத்தின் 1887 மில்லியன் டாலர்கள் நேரடி முதலீட்டில், 70% முதலீட்டினை சிங்கப்பூர் நிறுவனமான சில்வர் பார்க் இண்டர்நேசனல் தர இருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டது. மீதம் இருக்கும் 2000 மில்லியன் டாலர்கள் கடனாக பெறப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஓமன் அரசு இந்த திட்டத்தில் நாங்கள் இல்லை என்பதை வெளிப்படையாக செவ்வாய்க் கிழமை அறிவித்தது.
மேலும் எங்களுக்கும் சில்வர் பார்க் இண்டெர்நேசனல் நிறுவனத்திற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. இது தொடர்பாக ஒப்பந்தம் எதுவும் கையெழுத்திடவில்லை என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தாக இலங்கை முதலீட்டுக் குழு கூறியுள்ளது.
அக்குழுவின் அறிவிப்பின் படி சிங்கப்பூரில் இயங்கி வரும் சில்வர் பார்க் இண்டர்நேசனல் நிறுவனம் சிங்கப்பூரின் கணக்கியல் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்திடம் (Accounting and Corporate Regulatory Authority) முறையாக பதிவு செய்யப்பட்டு இயங்கி வருகிறது.
இதன் நான்கு இயக்குநர்களில் மூவர் பெயர்கள் சுந்தீப் ஆனந்த ஜெகத்ரட்சகன், ஸ்ரீநிஷா ஜெகத்ரட்சகன் மற்றும் அனுசியா ஜெகத்ரட்சகன் என்று குறிப்பிட்டு சென்னை முகவரி கொடுக்கப்பட்டுள்ளது. இம்மூவரும் அரக்கோணம் தொகுதியின் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் மகன், மகள், மற்றும் மனைவி ஆவார்கள்.
ஏற்கனவே திமுக கட்சியின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், இந்த விவகாரத்தில் மேலும் பல தகவல்கள் கசிய தொடங்கினால் நாடு கடந்த ஊழல் விவகாரத்திலும் பங்கெடுத்த கட்சியாக திமுக விளங்கும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இலங்கை வரலாற்றில் இவ்வளவு பெரிய நேரடி முதலீட்டினை இன்று தான் காண்கின்றோம் என்று இலங்கையின் அரசு வட்டாரம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
English Summary
dmk-arakonam-candidate-jagathrakshakan-family