தேர்தல் சுவாரசியம் : குடுகுடுப்பையுடன் வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்...! - Seithipunal
Seithipunal


நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக வேட்பாளர் குடுகுடுப்பையுடன் வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்றன 19ம் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் சுயட்சைகள் என பல முனை போட்டி இருந்து வருகிறது. நாளையுடன் பரப்புரை முடிவடையும் நிலையில் வித்யாசமான முறையில் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், கடலூர் மாநகராட்சியின் 3வது வார்டில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பிரகாஷ் என்பவர் குடுகுடுப்பையுடன் வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.

வீடு வீடாக சென்று நல்ல காலம் பிறக்குது நல்ல காலம் பிறக்குது, திமுகவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்தால் நல்ல காலம் பிறக்குது’  என கூறி வாக்கு சேகரித்தார்.  கடலூர் மாவட்டத்தில் வேட்பாளர்கள் பலரும் வித்யாசமான முறையில் வாக்குசேகரிப்பது குறிப்பிடதக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK candidate campaign innovative way


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->