கரூர் : பள்ளிப்பட்டி நகராட்சியில் ராஜினாமா கடிதம் வழங்கிய திமுக கவுன்சிலரால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


கரூர் : பள்ளிப்பட்டி நகராட்சியில் ராஜினாமா கடிதம் வழங்கிய திமுக கவுன்சிலரால் பரபரப்பு.!

கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி நகராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் இன்று தலைவர் முனவர் ஜான் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.அப்போது ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களும் தங்கள் பகுதி கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இந்த நிலையில், நகராட்சியின் 15 வது வார்டு உறுப்பினர் ஜமால் முகமது தனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என்று  கூறி, கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்வதாக, மனு கொடுத்துள்ளார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளரை சந்தித்தபோது பேசியதாவது: "இதுவரைக்கும் என்னுடைய கோரிக்கை எதுவும் நிறைவேற்றப்படவில்லை. எனது வார்டு பகுதியில் எந்த ஒரு அடிப்படை வசதியும் செய்து தரவில்லை. அதிகாரிகள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

நகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி தலைவர்கள் வார்டு பகுதியில் எந்தவொரு அடிப்படை வசதியும் செய்து தராமல் அவர்களுக்கு சாதகமான வேலைகளை மட்டும் செய்து வருகின்றனர்.

மக்கள் பிரதிநிதியாக இருந்தும் தனது வேலையை பொதுமக்களுக்கு செய்ய முடியவில்லை. அதனால், தன்னுடைய ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk councilor give resignation letter in pallipatti muncipal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->