திமுக உட்கட்சித் தேர்தல் : இரண்டாவது முறையாக போட்டியிடும் மு.க ஸ்டாலின்.! வேட்புமனு தாக்கல்.!  - Seithipunal
Seithipunal


திமுகவில் உட்கட்சித் தோ்தல்கள் நடைப்பெற்று முடிந்த நிலையில், 71 மாவட்டச் செயலாளா் பதவிக்கு நடைபெற்ற தோ்தலில் 64 மாவட்ட செயலாளா்கள் மீண்டும் அதே பதவிக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். இதில் ஏழு மாவட்டச் செயலாளா்கள் மட்டும் புதியவா்கள். 

அடுத்த கட்டமாக தி.மு.க. தலைவா், பொதுச் செயலாளா், பொருளாளா் ஆகியோரை தோ்ந்தெடுப்பதற்கு வரும் 9-ஆம் தேதி சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜாா்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. 

இந்தக் கூட்டத்தில், தி.மு.க. தலைவா், பொதுச்செயலாளா், பொருளாளா், 4 தணிக்கை குழு உறுப்பினா் உள்ளிட்டோரை தோ்ந்தெடுக்க உள்ளனா். மேலும், இந்த பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவா்கள் இன்று அறிவாலயத்தில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது. 

இதையடுத்து, இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என்று திமுக தலைமை கழகம் அறிவித்திருந்த நிலையில், தி.மு.க. தலைவராக உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக மீண்டும் கட்சித் தலைவா் பதவிக்கு போட்டியிட மனுதாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk election cm stalin file pettition


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->