திமுக முன்னாள் அமைச்சர் திடீர் மரணம்! சோகத்தில் தொண்டர்கள்! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் உடல் நலக்குறைவால் மீஞ்சூரில் காலமானார். அவருக்கு வயது 76. 

கடந்த 1996 -2001 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் சுந்தரம். 

திமுக துணை பொதுச்செயலாளராகவும் இருந்து வந்த மீஞ்சூர் க. சுந்தரம் உடல் நல குறைவால் உயிர் இழந்தார்.

மீஞ்சூர் க. சுந்தரம் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

இதற்கிடையே. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான க. சுந்தரம் மறைவுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான க. சுந்தரம் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.

கழகப் பணியிலும், மக்கள் பணியிலும் தம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்ட க.சுந்தரம் அவர்களது மறைவு பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் திருவள்ளூர் மாவட்ட மக்களுக்கும் கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Ex Minister K Sundram Death


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->