திமுகவின் முக்கிய புள்ளி திடீர் மரணம்! மிகுந்த வருத்தத்தில் முக ஸ்டாலின்!
DMK Ex MP Shanmuga Sundram death
திமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் உடல் நல குறைவால் இன்று காலமானார்.
கோபிசெட்டிபாளையம் பகுதியில் வசித்து வந்த திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வி பி சண்முகசுந்தரம் (வயது 75) உடல் நலவு குறைவு காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார். கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் 1998 ஆம் ஆண்டு வரை கோபிசெட்டிபாளையம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் சண்முகசுந்தரம்.
மேலும் திமுகவில் பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார். கடைசியா அவர் இறக்கும்போது திமுகவின் தலைமை செயற்குழு உறுப்பினராக இருந்தார்.
சண்முகசுந்தரத்தின் மறைவு திமுகவினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், திமுகவின் தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் சண்முகசுந்தரம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவரின் அந்த இரங்கல் செய்தியில், "கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு.வி.பி.சண்முகசுந்தரம் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமுற்றேன்.
கழகப் பற்றாளராக விளங்கிய வி.பி.சண்முகசுந்தரம் அவர்கள், 1996-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றியவர். இளம் வயது முதலே கழகப் பற்றாளராக விளங்கிய அவர், கழகம் அறிவித்த அனைத்துப் போராட்டங்களிலும் பங்கெடுத்தவர்.
அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், கழக உடன்பிறப்புகள் என அனைவருக்கும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்
English Summary
DMK Ex MP Shanmuga Sundram death