முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் நோட்டீஸ் - உயர்நீதிமன்றம் அதிரடி ஆணை!
DMK Govt For ADMK Govt Case Chennai HC order
கடந்த 2017-ல் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் தடை செய்யப்பட்ட குட்காவை எடுத்து வந்ததாக உயர் நீதிமன்றத்திற்கு உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
உரிமை குழுவின் இந்த நோட்டீசை உயர் நீதிமன்றம் தொடர்ந்து இருமுறை ரத்து செய்தது. இதனை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அதிமுக சட்டப்பேரவை செயலாளர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிபதி சி.குமரப்பன் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவிக்கவே, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
எனவே, இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக அரசுக்கு கடுமையான கேள்விகளை முன்வைத்து, இந்த வழக்கில் இன்று (ஜூலை 22) தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருத்தனர்.
இன்று வழக்கு விசாரணைக்கு முன்பே அரசு தரப்பு வழக்கறிஞர், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட யாருக்கும் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கவில்லை என்று கூறினார். மேலும் கடந்த ஆட்சியில் நோட்டீஸ் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்ப தவறிவிட்டனர் என்றும் தெரிவித்தார்.
இதனை அடுத்து நீதிபதிகள், முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட பிரமுகர்களுக்கு நோட்டீஸ் அனுப்பாதது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். பின்னர் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்கு மீண்டும் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை தள்ளி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
English Summary
DMK Govt For ADMK Govt Case Chennai HC order