இரகசிய காதலர்கள் மணக்கோலம் பூண்டுள்ளார்கள்! திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சர்ச்சை டிவிட்! - Seithipunal
Seithipunal


திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான விமர்சனங்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறார்.

அவருக்கு எதிராக பெரியாரின் ஆதரவாளர்களும், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையான போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றன. 

குறிப்பாக தமிழக முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டுவதும், அவருக்கு எதிராக காவல் நிலையங்களில் புகார் அளித்தும் வருகின்றனர். 

மேலும் சீமான் மீது 60க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில், பாஜக நிர்வாகியும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். 

இதற்கு பதில் அளித்த தமிழிசை சௌந்தர்ராஜன், "சீமான் எங்களின் தீம் பார்ட்னர், காலம் காலமாக பாஜக கூறிவரும் கருத்துக்களை தான் அவர் இப்போது பேசி உள்ளார்" என்று தெரிவித்தார்.

இது குறித்த செய்தியை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜ், "இதுவரை ரகசிய காதலர்களாக இருந்தார்கள். இப்போது ஊரறிய மனக்கோலம் பூண்டுள்ளார்கள்" என்று சர்ச்சைக்குரிய முறையில் கருத்தினை பதிவு செய்துள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பெண் விடுதலை பேசக்கூடிய திமுகவின் உயரிய பொறுப்பில் இருக்கக்கூடிய மனோ தங்கராஜ், ஒரு பெண் அரசியல் களத்திற்கு வந்து பொதுவெளியில் ஒரு கருத்தை தெரிவிக்கிறார் என்றால், அந்த கருத்துக்கு பதில் கூறும் போது, கண்ணியமான முறையில் பதில் விமர்சனத்தை முன் வைக்க வேண்டும். 

அதைவிடுத்து கீழ்தரமாக இதுபோன்ற விமர்சனம் செய்வது வெட்கக்கேடான செயல்" என்று கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Mano Thangaraj post issue BJP NTK Seeman


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->