பா.ஜ.க அலுவலகம் முன் மாட்டிறைச்சி வீச்சு போராட்டம் - வானதி சீனிவாசன் கடும் கண்டனம்!
BJP MLA Condemn to opponent party
கோவை பா.ஜ.க அலுவலகம் அருகே சிலர் மாட்டிறைச்சி வீசி போராட்டம் நடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் கோவில் அருகே பீப் பிரியாணி கடை நடத்திய விவகாரத்தில் தொடர்புடையவரை கைது செய்ய வேண்டும் என கோரி, பாஜக அலுவலகம் அருகே சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தடுத்து, கைது செய்தனர்.
போலீசாரின் நடவடிக்கையை எதிர்த்து சிலர் சாலையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், பாஜக எம்எல்ஏ வானதி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "இன்று கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகத்தின் மீது மாட்டிறைச்சி வீசுவதற்கு முயன்ற நபர்களை காவல் துறை கைது செய்துள்ளது.
அநாகரிகமான இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறேன்.இம்மாதிரியான நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு தமிழக காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP MLA Condemn to opponent party