சாட்சிகளை மிரட்டி, பல்டி அடிக்க செய்து... திமுக அமைச்சர்களின் சொத்துகுவிப்பு வழக்கு தீர்ப்பு! முன்னாள் அமைச்சர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal



கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த தங்கம் தென்னரசு வருமானத்திற்கு அதிகமாக 76.40 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாகவும், சாத்தூர் ராமச்சந்திரன் 44.56 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 

இந்த இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்த ஸ்ரீவில்லிபுத்தூர் கிழமை சிறப்பு நீதிமன்றம், கடந்த 2022 ஆம் ஆண்டு இருவரையும் இந்த வழக்குகளில் இருந்து விடுவித்து தீர்ப்பு வழங்கியது.

இந்த உத்தரவுகளை மறு ஆய்வு செய்யும் வகையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். 

இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

மேலும் அமைச்சர்கள் மீதான இந்த சொத்து குறிப்பு வழக்குகளில் நாள்தோறும் விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகளை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க வேண்டும் என்று, ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இது மட்டுமல்லாமல் அமைச்சர்களை சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்த கிழமை நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தும், அமைச்சர்கள் இருவரும் வழக்கின் விசாரணைக்காக வருகின்ற செப்டம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பு தெரிவித்துள்ளார்.  

இந்த தீர்ப்பு குறித்து தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "உயர்நீதிமன்றம் இன்று ஒரு நல்ல தீர்ப்பை வழங்கி இருக்கிறது. குறிப்பாக திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதிகாரத்தின் மூலம் பல்வேறு வகைகளில் சாட்சிகளை மிரட்டி, பல்டி அடிக்க செய்து அதன் மூலம் ஒரு தீர்ப்பை கிழமை நீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்று விடுதலை பெற்றது என்பது முறையற்ற விடுதலை என்கின்ற வகையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு எடுத்துரைத்து, வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பாக அமைந்துள்ளது. 

இப்போது சட்டத்தின் பிடியிலிருந்து ஊழல் செய்த அமைச்சர்கள் தப்பமாட்டார்கள். மேலும், நிச்சயமாக தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்த வேண்டும் என்று நல்ல தீர்ப்பாக அமைந்துள்ளது. தமிழக மக்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister case HC Judgement ADMK Jayakumar


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->