விசிக மாநாடு திமுகக்கு எதிரான மாநாடா? அமைச்சர் பரபரப்பு பேட்டி!  - Seithipunal
Seithipunal


விசிக நடத்தும் மாநாடு திமுக அரசுக்கு எதிரான மாநாடு இல்லை என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

முழு மதுவிலக்கை வலியுறுத்தி நடைபெறவுள்ள மாநாடு குறித்து அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், "நல்லச்சாராயத்தால் கள்ளச்சாராயத்தை தடுக்க முடியும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல.. சாராயம் என்றாலே அது கேடுதான்.

 

மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் ஒரே மேடையில் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. எந்தக் கட்சியும் வரலாம், அதிமுகவும் வரலாம்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்தக்கூடிய மாநாட்டால் தமிழக அரசுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று, அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டியில், "மது விற்பனையை இந்த திமுக அரசு தொடங்கி, அதற்காக மாநாடு நடந்தால் தான் இந்த அரசுக்கு பின்னடைவு. விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநாட்டால் எந்த பின்னடைவும் இல்லை.

எந்த கட்சி வேண்டுமானாலும் கோரிக்கையை வைக்க மாநாடு நடத்திக் கொள்ளலாம். ஆனால் இந்த மாநாடு திமுகவை எதிர்ப்பதற்காக நடத்தப்படுவது இல்லை. கோரிக்கைக்காக மாநாட்டை நடத்தினால் அரசியல் உடன் தொடர்பு படுத்தி பேசுவது தவறு" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Minister Muthusamy reply to VCK Maanadu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->