இன்னும் இரு வாரம் செந்தில்பாலாஜி மருத்துவமனையில் தான்?! அதிர்ச்சியில், அமலாக்கத்துறை எடுத்த முடிவு!
DMK Minister Senthilbalaji Case ED next move
சுமார்17 மணி நேரத்துக்கு மேலாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்கு பிறகு இன்று அதிகாலை அவர் கைது செய்யப்பட்டு நுங்கப்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
வரும் வழியில் அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக கத்தி, கதறி அழுது கூச்சலிட்டதால், பாதுகாப்பு படையினர் அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சோதனை நடத்தப்பட்டது. அதில், அவருக்கு இதய ரத்தக் குழாய்களில் மூன்று இடங்களில் அடைப்பு உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும், அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவமனை நிர்வாகம் பரிந்துரை செய்துள்ளது.
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால், சுமார் இரண்டு வாரங்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் மருத்துவமனையில் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையையும், செந்தில் பாலாஜி மருத்துவ குறிப்புகளையும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்களிடம் ஆன்லைன் மூலம் காண்பித்து, (கிராஸ் செக்) குறுக்கு விசாரணை நடத்த அமலாக்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் விசாரணைக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது அல்லது டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு எடுப்பார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
DMK Minister Senthilbalaji Case ED next move