திமுக எம்எல்ஏக்கு சொந்தமான லாரி மோதியதில், 26 வயது இளைஞர் பரிதாப பலி! ஓட்டுநர் தப்பி ஓட்டம்!
dmk mla raja lorry accident one young boy died
காஞ்சிபுரம் மாவட்டம், தாம்பரம் அடுத்த வரதராஜபுரம், ராயப்பா நகர் விரிவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சதீஷ்(26) என்ற இளைஞர் தாம்பரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜாவிற்கு சொந்தமான லாரி மோதி உயிரிழந்தார்.
சதீஷ் கடந்த 7 வருடங்களாக தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

நடுவீரப்பட்டில் உள்ள தனது வீட்டில் இருந்து ஆர்.டி.ஒ அலுவலகத்திற்கு சதிஷ் வந்து கொண்டிருந்த போது லாரி மோதியதில் விபத்து ஏற்பட்டது.
செங்கல்பட்டில் சிமெண்டை இறக்கிவிட்டு, மீண்டும் எஸ்.ஆர்.ராஜா சிமெண்ட் கிடங்கிற்கு லாரியை ஓட்டி வரும் போது, விபத்து ஏற்பட்டு உள்ளது.
விபத்து குறித்து சோமங்கலம் போலீசார் லாரியை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.
English Summary
dmk mla raja lorry accident one young boy died