ஆ ராசா வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஆ ராசா, சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். 

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த புகாரில், சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக அமலாக்கத்துறை ஆ ராசா மீது வழக்குப்பதிவு செய்து இருந்தது. 

இந்த வழக்கில் ஆ ராசா உள்ளிட்டோருக்கு வழக்கு ஆவணங்களை வழங்க உத்தரவிட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணையை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது. 

மேலும் அடுத்த விசாரணைக்கு ஆ ராசா ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி தொடந்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்கவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP A Raja ED Case CBI Court order


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->