போலி டாக்டரின் போலி கிளினிக்.."ரிப்பன் வெட்டி திறந்து வைத்த ஆ.ராசா எம்.பி".. நீலகிரி மக்கள் அதிர்ச்சி..!! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் போலி கிளினிக்குகள் செயல்படுகிறதா என்ற கோணத்தில் மருத்துவத்துறை இணை இயக்குனர் சந்திரா தலைமையிலான குழுவினர் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது காரமடை வெள்ளியங்காடு பகுதியில் கே.ஜே என்ற பெயரில் கிளினிக் செயல்பட்டு வந்தது தெரியவந்ததை அடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். 

இந்த கிளினிக்கில் டாக்டர் மனோஜ் பிரபு என்ற பெயரில் குறிப்பிடப்பட்டிருந்த சான்றிதழ்களை சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மனோஜ்குமார் என்பவரின் மருத்துவப் பதிவு எண்ணை பயன்படுத்தி பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தைச் சேர்ந்த ஜெயஜோதி என்பவர் போலி கிளினிக் நடத்தி வந்தது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் இந்தக் கிளினிக்கில் சிவகங்கை சேர்ந்த சதீஷ்குமார், புவனேஸ்வரன் ஆகியோர் மருத்துவர்களாக பணியாற்றி வந்துள்ளனர். அவர்கள் நோயாளிகளுக்கு ஊசி போட்டு மருத்துவம் பார்த்து வந்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவம் படித்த தேர்ச்சி பெற்றதாக கூறியுள்ளனர் ஆனால் அதற்கான எந்த ஒரு சான்றிதழும் அவர்களிடம் இல்லை. 

மேலும் வெளிநாடுகளில் மருத்துவம் படித்திருந்தால் இந்திய மருத்துவ கவுன்சில் தேர்வை எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற முடியும். ஆனால் அவ்வாறு தேர்ச்சி பெறாமல் போலி கிளினிக் நடத்தி வந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து போலி மருத்துவர்கள் மூன்று பேரையும் காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர். போலி கிளினிக்கை மூடவும் மருத்துவ துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். போலி மருத்துவர்கள் மூன்று பேர் கைதான விவகாரம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில்  ஜெயஜோதியின் மற்றொரு புதிய கிளினிக் கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நீலகிரி மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜே.ஜே கிளினிக் என்ற பெயரில் தொடங்கியுள்ளார். அதனை திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா ரிப்பன் வெட்டி திறந்து வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. போலி மருத்துவரின் கிளினிக்கை திமுக எம்பி நேரில் வந்து திறந்து வைத்த சம்பவம் நீலகிரி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dmk mp rasa inaugurated fake clinic in nilagiri


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->