வீடு கட்டணுமா..? "ரூ. 2 லட்சம் கொடு" என மிரட்டும் திமுக பிரமுகர்.. ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார்..!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் இடங்கணசாலை, மாட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவருடைய மனைவி ஆராயி அவருடைய மகள் மோகனா, அவருடைய தங்கை பிரியா மற்றும் அவருடைய குழந்தைகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளனர். அந்த புகார் மனுவில் "கடந்த 20 ஆண்டுகளாக நத்தம் புறம்போக்கு இடத்தில் 5 சென்ட் நிலத்தில் கூரை அமைத்து குடியிருந்து வருகிறோம்.

கூரை வீட்டை அகற்றிவிட்டு சிமெண்ட் அட்டை வீடு அமைக்க பொருட்கள் வாங்கினோம். கடந்த ஏப்ரல் 11ம் தேதி இடங்கணசாலை நகராட்சி திமுக பிரமுகர் உட்பட 3 பேர் "இந்த இடத்தில் வீடு கட்ட இரண்டு லட்சம் ரூபாய் தர வேண்டும் இல்லை எனில் வீடு கட்ட விடமாட்டோம்" என மிரட்டினர்.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரும் இங்கு வீடு கட்டக் கூடாது. இது அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் என கூறி வீடு கட்டும் பணியை தடுத்து நிறுத்தினார். நத்தம் புறம்போக்கு நிலத்தில் பாதை என ஒதுக்கப்பட்ட இடம் இருக்கும் பொழுது அதில் பாதை அமைக்காமல் மாறாக நாங்கள் குடியிருக்கும் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்.

இந்த நிலத்தை அபகரித்தால் கணவரால் கைவிடப்பட்ட நான், திருமணம் ஆகாத மகள், மனநலம் பாதிக்கப்பட்டு பார்வை குறைபாடு உடைய தங்கை பிரியா மற்றும் 3 குழந்தைகளும் வசிக்க இடம் இன்றி நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும். எங்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதை தடுத்து, பணம் கேட்கும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த மனுவில் தெரிவித்துள்ளார். அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட திமுக பிரமுகர் பணம் பணம் கேட்பதும் அதற்கு கிராம நிர்வாக அலுவலரே உடந்தையாக இருப்பதும் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK official asking 2lakh rupees for build a house


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->