டீ கடையில் ரூ. 500 மாமூல்! பட்டா கத்தியை நீட்டிய திமுக பிரமுகர் கைது! - Seithipunal
Seithipunal


சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கத்தியை காட்டி பணம் கேட்டும் மிரட்டிய நான்கு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்: 

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தேநீர் கடை நடத்தி வரும் ரவியிடம் கடைக்கு வந்த நான்கு பேர் 500 ரூபாய் பணம் கேட்டு கேட்டுள்ளனர். 

அதனை தர மறுத்த ரவியிடம், நான்கு பேரில் ஒருவர் பட்டாகத்தியை காண்பித்து மிரட்டியதாக தெரிகிறது. 

இதனை கண்ட அருகில் இருந்த காவலர், அவர்களை தடுக்க முயன்ற போது அவரையும் கத்தியை காட்டி மிரட்டி விட்டு தப்பி ஓடினர். 

இந்த காட்சிகள் அப்பகுதி கடைகளில் இருந்த சி.சி.டிவி கேமராவில் பதிவாகியிருந்தது. காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த நபர்கள் தி.மு.கவைச் சேர்ந்த ஊராட்சி மன்ற வார்ட் உறுப்பினர் மகுணபதி மற்றும் பிரவீன், மணிகண்டன், ஹரிஹரன் என்பது தெரியவந்தது. 

அதனை அடுத்து பிரவீன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்த நிலையில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

திமுக உறுப்பினர்கள் பட்டா கத்தியை காண்பித்து, போலீசாரை மிரட்டிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK official tea shop Rs. 500 normal holding a belt knife


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->