56 முறை காவல் நீட்டிப்பு! செந்தில்பாலாஜியின் வழக்கில் நடந்த குறுக்கு விசாரணை! முதல் சாட்சியே இன்னும் முடியவில்லை! - Seithipunal
Seithipunal


செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 56வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

செந்தில் பாலாஜியின் காவலை வருகின்ற ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை நீட் தேர்வு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அள்ளி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

மேலும், அமலாக்கத்துறை வழக்கில் வங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் இன்றைய தினம் குறுக்கு விசாரணை செய்துள்ளார். 

இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாத காரணத்தினால், இந்த வழக்கினை வருகின்ற 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அன்றைய தினம் முதல் சாட்சியன் வாங்கி மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்துவார்.

வழக்கும், பின்னணியும்:

சட்ட விரோத பண பரிமாற்ற வழக்கில், கடந்த ஆண்டு அமலாக்க துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஓராண்டுக்கும் மேல் சிறையில் இருந்து வருகிறார்.

இது குறித்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாற்று பதிவு கடந்த ஆகஸ்ட் 8ஆம் தேதி நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து, கடந்த 16 ஆம் தேதி செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சாட்சி விசாரணையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் துவங்கியது.

இந்த வழக்கில் முதல் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கரூர் சிட்டி யூனியன் வங்கியின் அப்போதைய தலைமை மேலாளளர் ஹரிஷ்குமார் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

இதற்க்கு செந்தில் பாலாஜி தரப்பில் சில ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து வங்கி தலைமை மேலாளரிடம் செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக வழக்கு ஆகஸ்ட் 22க்கு (இன்று) தள்ளிவைக்கப்பட்ட நிலையில், இன்றும் இந்த குறுக்கு விசாரணை நிறைவடையாத காரணத்தினால், இந்த வழக்கினை வருகின்ற 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Senthilbalaji ED Case court order


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->