திருக்கழுக்குன்றம் கொலை சம்பவம்.. திமுக பெண் கவுன்சிலர் அதிரடி கைது..!!
DMK woman councilor arrested in thirukkalukkunram murder case
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், மசூதி தெருவில் வசித்து வந்தவர் சர்புதீன். இவர் அதே பகுதியில் பழைய இரும்பு கடை வைத்து நடத்தி வருகிறார். அப்பகுதியில் உள்ள பள்ளி வாசலின் சுற்றுப்புற இடங்களை சிலர் ஆக்கிரமித்திருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதனால் ஆக்கிரமிப்பு கடை வைத்திருந்தவர்கள் சர்புதீன் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த சர்புதீன் கார் மங்கலம் என்ற இடத்தில் நின்று கொண்டிருக்கும் பொழுது 5 பேர் கொண்ட கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து சர்புதீனை வெட்டி கொலை செய்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் அகமது பாஷா, பாஷா ஆகிய இரண்டு பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் கொலை சம்பவத்தில் உடன் இருந்த மேலும் 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர்.
சர்புதீனுக்கும், திருக்கழுக்குன்றம் 10 ஆவது வார்டின் திமுக பெண் கவுன்சிலரான தவுலத்பீவி மற்றும் அவரது மகனுடன் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கு தொடர்பாக காரில் சென்று கொண்டிருந்த சர்புதீனை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அரிவாளால் வெட்டி கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில், திமுக பெண் கவுன்சிலர் தவுலத்பீவி மற்றும் அவரது மகன் பாரூக் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
English Summary
DMK woman councilor arrested in thirukkalukkunram murder case